Wednesday, September 10, 2008

'அற்ப' இசுலாமும் 'பயங்கரவாத' இந்த்துத்துவமும் ஒன்றா?


மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தனம், தற்குறிப்புத்தி என்று நீளும் அனைத்து மத பழமைவாதங்களும், சமூக அக்கறையை முற்றாக ஒழிக்கும் சொரனையற்ற அற்பத்தனங்களும் மட்டுமே கொண்டிருக்கும் மதங்களில் நிச்சயம் இவர்கள் சொல்லும் இசுலாத்துக்கும் பெரிய இடமுண்டு. இதுபோன்ற அற்பத்தனங்கள் கண்டிக்கப்படவேண்டியவையும், அம்பலப்படுத்தப்படவேண்டியதுமாகும்.

குறிப்பாக பெண்களை இழிவுபடுத்துவதில் எந்தமதமும் ஒன்றுக்கொன்று சளைத்தது கிடையாது. விண்ணை முட்டும் கோபுரத்தைப் படைக்கும் உழைப்பாளி மக்களுக்கு அதன் நிழலில் கூட சற்று இளைப்பாற அனுமதி வழங்கப்படுவதில்லை இந்துமதத்தில். இந்த இழிநிலையைவிட எந்தவிதத்திலும் குறைந்தது இல்லை, பெண்களை பள்ளிவாசல்களுக்கு வெளியில் நிறுத்தும் இசுலாத்தின் ‘மநுதர்மம்’.

இன்னும் பர்தா போன்ற கருப்புத் திரைக்குள் சிறையிருக்கும் இசுலாமியப் பெண்களின்மீது அந்த மதம் பொழியும் வெறுப்புக்கு, அவலத்திற்கு வேறென்ன சாட்சியம் வேண்டும். இசுலாத்தின் பெண்ணடிமைத்தனம் குறித்து எழுதப் போனால் அதற்கென்றே பல்வேறு தனிப்பட்ட தலைப்புகளில் நாம் விவாதிக்கலாம். அந்தகையதொரு இழிநிலையும் அவலமும் அம்மதத்தில் மண்டிக்கிடக்கிறது. இதுகுறித்த விமர்சனங்கள் எண்ணற்றவையாக இன்னும் இங்கே இருக்கின்றன. தஸ்லீமா நஸ்ரீன் முதல் நம்முடைய தமிழகத்து சல்மா வரை, இதுவரை யார்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் இசுலாமிய புகழ்பாடும் ஒருவரும் நேர்மையாக பதிலளித்தது கிடையாது மாறாக இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள், இப்படிப்பட்ட அயோக்கியத்தனங்களை விமர்சிப்பவர்கள் கடுமையாக தாக்கப்பட்டும் இருக்கின்றனர்.

நம்முடைய அன்மைநாடான பாகிஸ்தான் முதல் பல்வேறு இசுலாமிய நாடுகளில் ‘அல்லாஹ்’ என்பவனைப் பற்றி கேள்வியெழுப்புகிறவர்களுக்கு மரணதண்டனை வழங்கும் சட்டம் இன்னும் இருக்கிறது. கேட்டால், “இசுலாம் கண்மூடித்தனமாக நம்பி வழிபடுவதற்கான மதம் அல்ல, அது ஒரு மார்க்கம் மட்டுமே” என்று பொழிப்புரை கூறும் இசுலாமிய அறிஞர்களும் இங்கிருக்கத்தான் செய்கின்றனர்.

பல்வேறு விமர்சணங்களிலும் எண்ணற்ற ஆய்வுகளையும் சந்தித்துத்தான் வளர்ந்து நிற்கிறது அறிவியலும் அது இச்சமூகத்துக்கு ஈந்த கண்டுபிடிப்புகளும். ஆனால், தன்னை நோக்கி எழுப்பப்படும் ஒற்றைக் கேள்விக்கு மரணத்தை பதிலாகத் தருகின்ற அயோக்கியத்தனத்தை சட்டமாக்கிக் கொண்டிருக்கிறது இம்மதம். அறிவியலை ஏற்பதாகச் சொல்லிக்கொண்டு அறிவியலின் அடிப்படையான விமர்சணங்களையும் ஆய்வுமுறைகளையும் அடியோடு புறக்கணிக்கின்றன அனைத்து மதங்களும். எனவேதான் அறிவியலுக்கும் இதுபோன்ற மதவாத மூடநம்பிக்கைகளுக்கும், மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் இருக்கின்றது.

எந்த மதமும் தன்னைச் சார்ந்துள்ள அப்பாவி உழைக்கும் மக்களின் இன்னல்களுக்குத் தீர்வு சொல்வதில்லை. எந்த மதமும் தான் சார்ந்துள்ள சுரண்டல் – ஆதிக்க வர்க்க சேவையில் விலகிநின்றதில்லை. இங்கே எண்ணற்ற இசுலாமிய மக்கள் இந்து-இசுலாமிய வெறி நடவடிக்கைகளின் மூலம் கொடுமையில் உழன்று கொண்டிருக்கும் போது, அவர்களின் இந்நிலைக்கு ஒரு தீர்வு சொல்லாமல் இசுலாமியப் பெருமைகளைப் பற்றி பேசுவது கேவலமானதாகும். இது, ஊரே தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் வேளையில் அதில் சென்று பீடியைப் பற்ற வைத்து இழுப்பதற்கு சமமானது.

அதேபோல இந்துமதவெறி பயங்கரவாதிகள் இசுலாத்தின் மீது வைக்கும் கேள்விகள் இப்படிப்பட்ட பொதுவான கண்ணோட்டத்திலிருந்து எழுவது கிடையாது. அவர்களின் விமர்சணங்கள் எல்லாவற்றையும் விடக் கீழானதாகும். “பொது சிவில் சட்டத்தின் மூலம் பல பொண்டாட்டி கட்டும் உரிமையை இசுலாமியருக்கு மறுக்க வேண்டும். அந்த ‘வாய்ப்பு’ இந்துமதம் உள்ளிட்ட வேறெந்த மதத்திலும் வழங்கப்படுவதில்லை” என்று குமுறும் பார்ப்பனீய-இந்துவெறி அத்துவானி வகையாறக்கள் ‘வயிற்றெரிச்சலோடு’ கூப்பாடு போடுகின்றனர். குழந்தை பெற்றுக்கொள்வதிலும் இசுலாமியர்களுக்கு எந்தத் தடையும் சட்டரீதியாக இல்லை என்று ஒப்பாறி வைக்கின்றனர் அவர்கள். “இப்படி பலதாரங்களை வைத்து பலபிள்ளைகளைப் பெற்று மக்கள் தொகையில் தங்களது எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போகிறார்கள் முசுலீம்கள். இதனைக் கண்டிப்பது எப்படி தவறாகும்” என்று கேட்கிறார் ஒரு அம்பி. இதை உடனடியாகத் தடுக்காமல் விட்டால், இங்கே இந்துக்களின் எண்ணிக்கையைவிட இசுலாமியர்களின் எண்ணிக்கை கூடிவிடுமே என்பது அவரது கவலையாம். இதுபோன்ற அருவெறுப்பான அற்பர்களின் விமர்சனங்களின் போக்கிலேயே பெரும்பாலும் இங்கே இசுலாத்துக்கு எதிராக விமர்சனங்கள் பதியப்படுவதாக அறிகிறேன். இதுபோன்ற இசுலாமிய அற்பவாதங்களைவிட பலமடங்கு ஆபத்தானது இந்துவெறி பயங்கரவாதம். அதைப்பற்றி நாம் விவாதிக்கக் கோரினால் நேரமையாக வாதிட வக்கற்ற பலரும் இங்கே வரிந்துகட்டிக் கொண்டு நிற்பது வேடிக்கையாக இருக்கிறது.

பார்ப்பனீய-இந்துமதத் தீண்டாமை இழிவுகள் குறித்து இங்கே நாம் வைத்த எந்தக் கேள்விக்கும் இந்துமதவெறியர்களோ அல்லது இசுலாத்தை நாம் விமர்சிக்க வேண்டும் என்று கோருபவர்களோ பதில் சொன்னதே கிடையாது. இங்கே இசுலாம் விமர்சிக்கப் பட்டிருக்கும் வேளையில் பல்வேறு கருத்துக்களை வைத்து வாதிட்டுவரும் நண்பர்.ஜாய் போன்றவர்கள் திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவனின் வாயில் ‘பீ’ திணிக்கப்பட்டது குறித்து நாம் எழுதியபோது, நமக்கு எதிராக எழுதியவர்கள்தான் என்பதையும் நாம் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. “அது பகுத்தறிவா?”, “இது பகுத்தறிவா?” என்றெல்லாம் பார்ப்பனீயத்துக்கு எதிராக நாம் விவாதித்துக் கொண்டிருக்கையில் ‘பகுத்தறிவு’க் கேள்வியெழுப்பி இந்துவெறியர்களின் ‘ஆபத்பாந்தர்களாக’ அவதரித்து எழுதிய நண்பர்கள், இங்கே இசுலாத்தை அத்துவானிகளின் கேள்விகளைக் கொண்டு விமர்சித்து எழுதிவருவது அவர்களின் நிஜமுகத்தை இங்கே அம்பலப்படுத்துகிறது. தான் சார்ந்த மதத்தின் வெறியை நியாயப்படுத்துகின்ற எவருக்கும் பிறமதத்தைக் கேள்வி கேட்கும் தகுதி மட்டும் எப்படி இருக்க முடியும்? இந்துமதத்தின் அயோக்கியத்தனங்களை கண்டிக்கத் திராணியற்றதோடு ஆதரித்து எழுதுவதும், அதனைக் கண்டிக்கின்ற நம்மை இழிவாகப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர்கள் இசுலாத்தைக் கண்டித்து துள்ளாட்டம் போடுவதில்தான் இவர்களது மதச்சார்பின்மைக் கோவனம் அவிழ்ந்து விழுந்துகிடக்கிறது.

இசுலாத்தைப் பற்றி பார்ப்பனீயவாதிகள் விமர்சிப்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். இதுபோன்ற ‘பகுத்தறிவுக்கு பொழிப்புரை எழுதும்’ அற்பர்களின் ஒருசார்பான விமர்சனங்களை என்ன சொல்வது? நமக்கு அற்பத்தனங்களை விமர்சிப்பதற்கு நேரமில்லை. அதைவிட அதிகமாக சாதீய-தீண்டாமை இழிவுகளை இங்கே நிலைத்திருக்கப் போராடிவரும் இந்துவெறிக்கும், அது குடைபிடித்து நிற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகப் போராடவேண்டிய / எழுதவேண்டிய மாபெரும் பணி நம்முன் நிற்கும் போது இசுலாத்தின் அற்பவாதம் குறித்து எழுத நேரமில்லை. போராடுவோம்.

தோழமையுடன்,
இரணியன்.
http://eraniyann.blogspot.com

Wednesday, September 3, 2008

பார்வதியின் அழுக்கும், பார்ப்பன கொழுப்பும்......

குளிக்கச்சென்ற கவுரியை (அதான் நம்ம சிவன் பொண்டாட்டி பார்வதிதான் இப்படி…..) நட்டாற்றில் விட்டு போய்விட்டான் அவள் கனவன் சிவன். அவள் குளிப்பதை யாரும் பார்த்துவிடாமல் காவல் இருப்பதற்கு ஒரு நாயோ நரியோ கிடைக்காததால், தன் உடலில் இருந்த அழுக்கைச் சுரண்டியெடுத்து உருட்டி அதற்கு கண், காது, மூக்கெல்லாம் வைத்து மறக்காமல் பெரிய தொப்பையையும் வைத்து வடிவமைத்து ‘புடிச்சி வைச்ச புள்ளயாரை உருவாக்கி வைக்கிறாள்’. சற்று நேரம் கழித்து வந்த மாமா சிவன், இதுயாருடா எம்பொண்டாட்டி குளிக்கிறதப் பாக்கறதுன்னு சொல்லி புள்ளயாரு (பார்வதியின் அழுக்கு) தலையை வெட்டி வீசிவிடுகிறார். ‘அம்பி’யைத் தான் உருவாக்கிய விவரத்தையும் காரணத்தையும் மாமாவிடம் கவுரி விளக்கி கண்ணீர் வடிக்கிறாள். வேறு வழியின்றி தலையைத் தேடி அலைகிறார் மாமா. வெட்டிவீசப்பட்ட தலையைக் காணாததால் காட்டில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி ‘பார்வதியின் அழுக்குக்கு சூட்டிவிடுகிறார்’ இதுதான் புள்ளயாரு உருவான கதை.
படிக்கும்போதே குமட்டலெடுக்கும் இக்கதையை இச்சமூகத்துக்கு கோடனுகோடி ‘பக்த்ரகளுக்கு’ச் சொன்னது நாம் அல்ல. இது எந்த பகுத்தறிவு வாதியும் எழுதியது கிடையாது. ‘ராமகாவியம்’ என்ற காமகாவியத்தை அவாளே எழுதியது போலவேதான் இதையும் எழுதியிருக்கிறார்கள். புள்ளயாரின் பெருமையாக நினைத்து இதை எழுதியது சாட்சாத் நம்ம அம்பிகள் கூட்டம்தான். மலத்திற்கு சந்தனத்தில் பொட்டுவைத்தது போல இந்தப் ‘பார்வதியின் அழுக்கை’ சோடித்து நம்மக்கள் தலையிலேற்றியதில் இந்த சினிமா புரோக்கர்களுக்கும் கனிசமான பங்கு இருக்கிறது.
இந்த பார்வதியின் அழுக்கோடு கொஞ்சம் பார்ப்பனக் கொழுப்பையும் சேர்த்துக் குழைத்து பக்தர்களின் தலையில் ஏற்றிவைத்துத்தான் இந்த ‘கலவரப் புள்ளயாரை உருவாக்கிப் பராமரித்து வருகிறார்கள்’. புள்ளயாரு என்பவன் பார்வதியின் அழுக்கு, அதை என்னதான் சோடித்தாலும் அது இருக்கவேண்டிய இடம் என்பது சாக்கடையோ அல்லது மூத்திர சந்துதான் என்பதை நாமெல்லோரையும் விட நன்கு உணர்ந்த ராமகோபாலன், 'எச்ச'ராஜா வகையறாக்கள் அதனை ஒவ்வொரு ஆண்டும் கழிசடைப் பகுதியிலேயே குத்தவைக்கிறார்கள். எனவே, புள்ளயாரைப் பற்றி எழுதிய வகையிலும், அந்த ‘பார்வதியின் அழுக்கை’ முச்சந்தியில் நிறுத்திய வகையிலும் அதனை இழிவுபடுத்தியது ராமகோபால வகையறாக்கள்தான். இதைச் செய்ததில் முற்போக்காளர்களுக்கோ பிறமதத்துக் காரர்களுக்கோ எந்தப் பங்கும் இல்லை.
]
அழுக்கில் உருவாகி கழிசடையில் வளர்ந்த புள்ளயாரை ONYX வண்டியிலேயோ அல்லது நீல்மெட்டல் பனால்கா போன்ற குப்பை வண்டிகளில் ஏற்றிச் சென்று கொளுத்திவிடாமல் நமது அப்பாவி உழைக்கும் மக்களின் தோள்களின் மீது ஏற்றிவைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கிறார்கள். கடலுக்கடியில் உள்ள அழுக்குகளையும் இன்னபிறவையும் உண்டு வாழும் மீண்கள், சுறாக்களாலேயே சீந்தமுடியாத அளவுக்கு நாற்றமெடுத்த இச்சரக்கை, நம் அப்பாவி பக்தர்கள் போலவே அறியாமையினால் முகர்ந்துப்பார்த்த மீன்கள், செத்து மிதக்கின்றன. அதனைக் கரைப்பதற்காக, அந்த அழுக்கைச் சுமந்துவரும் பக்தர்களோ கலவரத்தினால் சாகிறார்கள். இந்துவெறி பயங்கரவாதிகளின் திட்டமிட்ட கலவரத்தினால் கொல்லப்படுகின்ற / தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்ற மக்களில் இந்துவோ, முசுலீமோ எந்த மதத்துக்காரன் மடிந்தாலும் இக்கலவரத்தை ஏவிய பார்ப்பனீய பயங்கரவாதிகளுக்குக் கொண்டாட்டமாகத்தான் அமைந்துவிடுகிறது. இதுபோன்று இந்துத்துவத்தை முழங்கிவரும் இந்தக் கயவர்கள் இந்துக்களுக்கு எதிராக செய்தவற்றைக் கொஞ்சம் புரட்டிப்பார்த்தால் பார்வதியின் அழுக்கைவிடக் கேவலமாக நாறி ஊர்சிரிக்கும் அளவுக்கு இருக்கிறது.
தோழர்களே / நண்பர்களே,
கலவரத்துக்காகத் திட்டமிட்டு இந்துத்துவ பயங்கரவாதிகள் இதனை கடலில் கரைக்க வருவார்கள். அதற்கும் முன்னதாக நம்மால் இயன்றவரை இந்த உண்மைக் கதையை, பார்வதியின் அழுக்கு புள்ளயாரான வரலாறை, அப்பாவியாய்ச் சுமந்து திரியும் பக்தர்களின் மனத்தில் கரைப்பது ஒவ்வொரு முற்போக்காளர்களின் கடமையாகிறது. கரைப்போம்.
தோழமையுடன்,
இரணியன்.

இந்துத்துவக் காலிகளை தெருவில்தான் சந்திக்க வேண்டும்....

யக்குனர் சீமானின் கூட்ட்டத்தில் பார்ப்பனீய / இந்துவெறி பயங்கரவாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டது.பெரும்பான்மையான மக்கள் தொகையில் வெறும் இரண்டரை சதவீத எண்ணிக்கையில் இருந்துகொண்டு, உழைப்பின் வாசனையைக் கூட அறிந்திராமல் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சமூகத்தை, உழைக்கும் மக்களைச் சுரண்டி ஏப்பம் விட்டு தொந்திவளர்த்த பார்ப்பனீய நச்சுப் பாம்புகள், பூலேவும், அம்பேத்கரும், பெரியாரும் தலைமையேற்று நிகழ்த்திய பார்ப்பனீய / சாதீய இழிவு ஒழிப்பு போராட்டங்களில் தங்களது தலையை சற்று மடக்கி புற்றுக்குள் புகுந்துகொண்டன. அவை இன்று இந்துதர்மம், முசுலீம் எதிர்ப்பு, தேசபக்தி என்று வெவ்வேறு முகமூடியுடன் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியிருக்கின்றன.
பெரியார் ராமனை ஊர்வலமாக இழுத்துவந்து முச்சந்தியில் வைத்து செருப்பால் அடித்தபோதும், நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் தனது ‘கீமாயணம்’ நாடகத்தினூடாக ராமனையும் பார்ப்பனீயத்தையும் தோலுறித்து அம்மனமாக்கியபோதும் புற்றுக்குள்ளேயே செயலற்று சுருண்டு ‘பத்திரமாக’க் கிடந்த பார்ப்பனீய நச்சுப்பாம்புகள் இன்று மீண்டெழுந்து வருகின்றன.
காஷ்மீர் முதல் கருநாடகம் வரை இந்துத்துவ கொலை வெறிபிடித்து கொடட்டமடித்துத் திரியும் இந்த பார்ப்பனீயக் கும்பலுக்கு தமிழகம் பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதற்குக் காரணம் இது பெரியாரின் மண் என்பதும் பெரியாரின் வாரிசுகளாக நாம் பார்ப்பனீயத்துக்கு எதிராக உறுதியாக நிற்பதுவும்தான்.
தமிழகத்தில் தனது கலவரங்ளினூடாக கால்பதிக்க எண்ணிய இந்துத்துவ கும்பல் அதற்கு முதலில் தேர்ந்தெடுத்தது கோவையைத்தான். கலவர சகுனி ராமகோபாலனின் தலைமையில் கோவையில் அப்பாவி முசுலீம் மக்களுக்கு எதிராக கலவரங்களைத் தொடங்கினர். அதன் விளைவாக நடைபெற்ற குண்டு வெடிப்புகள், அப்பாவிகளின் கைதுகள் என்று இன்றும் கோவையில் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் மதவெறிப் பிரச்சினைகள் ஏராளம். இந்துவெறியைப் பொறுத்தவரை இதுபோன்ற கலவரங்களில் அப்பாவி மக்களின் ரத்தத்தைக் குடித்துதான் வளர்ந்திருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் இன்று அவர்கள் சொல்லிக்கொள்ளும்படி கொஞ்சம் வலுவாக (எண்ணிக்கையில்) இருக்கும் பகுதி கோவை – கவுண்டம்பாளையம் பகுதியாகும்.
இந்து மதத்துக்குள்ளே இருக்கின்ற சாதீய இழிவுகளுக்காக போராடாமல், யோக்கியமாக அவற்றுக்கு பதில் சொல்லாமல், வேற்று மதத்துக்காரர்களுக்கு எதிராக பீதியையும் பதற்றத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியர்களை சமரசமற்று கண்டிக்கும் விதமாகத்தான் தோழர் சீமான் அவர்களின் பேச்சு இருந்திருக்கிறது. தோழர் சீமானின் பேச்சு அப்பகுதியில் அவர்களின் இருத்தலை கேள்விக்குள்ளாக்குவதாக இருந்திருக்கிறது. அவர்களின் அஸ்திவாரத்தைப் பிடித்து உலுக்கும் விதமாக அவரது பேச்சு இருந்திருக்கிறது. அதனைப் பொறுக்க முடியாமல், பொதுவாக அப்பகுதியில் கந்துவட்டியும், கட்டைப்பஞ்சாயத்தும் மொள்ளமாறித்தனமும் முடிச்சவிக்கித்தனத்துக்கும் பெயர்போன இந்துத்துவ பொறுக்கிகள் “இதைத் தொடர்ந்து அனுமதித்தால் மக்களுக்கு நம்மேல் இருக்கும் பயம் (!) போய்விடுமே” என்கிற அவசரத்தில் நிகழ்த்திய தாக்குதல்தான் அது.
இந்துத்துவத்தி்ன் ஆணிவேர் பார்ப்பணியத்துக்குள்ளும் பார்ப்பனீயத்தி்ன் ஆணிவேர் இந்த சாதீய இழிவுகளுக்குள்ளும்தான் ஒளிந்திருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. நாம் சாதீய இழிவுகள் குறித்து கேள்வி எழுப்பினால் அது பார்ப்பனீயத்தின் குடுமியைப் பிடித்து் உலுக்குவதாக இருக்கிறது. அதனை தோழர் சீமான் சற்று அழுத்தமாகப் பிடித்து ஆட்டியதால்தான் இவ்வாறு பொதுக்கூட்டத்தில, நட்டநடு வீதியில் இந்துத்துவம் அம்மனமாக நின்றிருக்கிறது.
தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி வாயில் ‘பீ’யைத் திணித்ததும், தேனி பள்ளப்பட்டியில் தாழ்த்தப்பட்டவன் வாயில் ‘மூத்திரத்தை’ அடித்ததும்கூட இந்த இந்துமதம்தான். அதனால்தான் இல்லாத ராமன் பாலத்துக்கும் ராமன் கோவனத்துக்கும் கண்டனக் கூட்டம் நடத்துகின்ற இந்துத்துவ கும்பல, சாதியத்துக்கு எதிராக பேசுவதில்லை. ஆனால், சாதீயத்துக்கு எதிராகப் பேசுபவர்களையும் பேச அனுமதிப்பதில்லை.

சாதீய இழிவுகளுடன் அழுகிநாறும் இந்துத்துவம், மக்களை ஏமாற்றுவதற்காக பராமரித்து வரும் யுக்திதான் பக்தி. நாம் பார்ப்பனீய இழிவுகளைக் குறித்து கேள்வியெழுப்பினால், தமது பூநூலை நீட்டி பக்திக்கும் சேர்த்து போட்டுக்கொண்டு், “அய்யோ பக்தியைக் கொச்சைப்படுத்திவிட்டார்கள், அய்யோ இந்து தெய்வங்களைக் கொச்சைப்படுத்திவிட்டார்கள்” என்றெல்லாம் கூப்பாடு போடுவார்கள். அதுதான் இச்சம்பவத்தினூடாகவும் நிகழ்ந்திருக்கிறது. தோழ்ர்கள் மீது ‘இந்து தெய்வங்களையும் பக்தியையும் கொச்சைப்படுத்திவிட்ட’தாகத்தான் வழக்கு பதிந்திருக்கிறார்கள்.
தெய்வம், பக்தி என்று இவர்கள் கொண்டாடும் கோயில்களில்தான், இந்துமதத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகின்ற தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் வழிபட முடியாமல் விரட்டப்படுகின்றனர். புதைத்து புல் முளைத்து்விட்டதாக சிலர் சொல்லிக்கொள்ளும் தீண்டாமையின் முழு் உருவமாகத்தான் இன்றும் கோயில்கள் நின்று கொண்டிருக்கின்றன. இதிலெல்லாம் கொச்சைப்படாத இந்துத்துவ தெய்வங்கள்தான், தீண்டாமையை நாம் கேள்வி கேட்பதனால் இழிவாகிவிடுகின்றனவாம். இவர்கள் சொல்லும் ‘இந்துதர்மம்’ என்பது சாதீயத் தீண்டாமை இழிவுகளைப் போற்றிப் பாதுகாக்கும் ‘ஏற்பாடு’ மட்டுமதான்.
இப்படிப்பட்ட இந்துத்துவக் காலிகளை நாம் தெருவில் தான் சந்திக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத்தான் இருக்கிறது இச்சம்பவம். பெரியாரின் பூமியில் பார்ப்பனீய / இந்துத்துவ நச்சுப்பாம்புகளை தலைதூக்கவிடாமல் நசுக்குவோம். அந்த வகையில் தோழர் சீமான் அவர்களுக்கும் பெரியார் திராவிடர்கழகத் தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழமையுடன்,
இரணியன்.

கோவை-உக்கடம் 'இந்துக்களால்' விரட்டப்பட்ட ராமகோபாலன்...

கலவர நாரதன் ராமகோபாலன் என்கிற இந்துத்துவ காலிகளின் தலைவன் தோழர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி அவர் தொழில்முறையில் சார்ந்துள்ள திரைப்படத்துறையில் புகார் அளித்துள்ளான். திரைத்துறையினர் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஒகேனேக்கல் குறித்தான போராட்டத்தில் பேசிய சத்தியராஜிக்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்குப் போன இதே ராமகோபாலன், சீமான் விசயத்தில் கொல்லைப்புறமாக நுழைகிறான்.



அற்பப்பிழைப்புவாதிகளும் பாலியல் வக்கிரங்களை விற்றுப் பிழைக்கும் சமூகவிரோதிகளும் நிரம்பிய சினிமாக் கழிசடைக்குள்ளிருந்து சமூக அக்கறையோடு ஒருவன் செயல்பட விரும்பினால் அதற்கான களம் திரைக்கு உள்ளே இல்லை, வெளியே மக்கள் மத்தியில்தான் அதற்கான சரியான களம் உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட தோழர் சீமான், தன்னுடைய சமூக ரீதியான செயல்பாடுகளை பொதுமேடைகளில் வெளிப்படுத்திவருகிறார்.



திரைக்குள்ளேயும் வெளியேயும் அவருடைய செயல்பாடுகளில் எனக்கு பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் இருந்தபோதிலும், சமீபத்திய கோவைக் கூட்டத்தில் சீமான் அவர்களின் செயல்பாடு சரியாகத்தான் இருந்துள்ளது.இந்துமதத்துக்குள் இருக்கும் சாதீய அழுக்குகளைச் சுட்டிக்காட்டி ‘நையப் புடை’த்திருக்கிறார் சீமான் அக்கூட்டத்தில். தமிழ்ச்சமூகத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கும் நேரெதிர் விரோதிகளாக இருக்கும் இந்துத்துவக் கருங்காலிகளை எதிர்ப்பதில் நாம் சுய முரண்பாடுகளைத்தவிர்த்து சீமானுடன் உடன்படுவதில் தவறில்லை.



சீமான் மேடையில் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல்தான் ஆத்திரத்தில் அசடு வழிந்திருக்கிறார்கள் ராமகோபாலனின் பரிவாரத்தினர். இப்பிரச்சினையை திரைத்துறை வரைக் கொண்டுவந்திருக்கும் ராமகோபாலனாகட்டும், கோவையில் கண்ட இடங்களிலெல்லாம் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய ‘எச்ச’(ப்பொறுக்கி)ராஜாவாக இருக்கட்டும் எவனும் சீமானின் கேள்விக்கு யோக்கியமாக பதில் சொல்லவேயில்லை இன்றுவரை. இவ்வளவு தீண்டாமை இழிவுகளையும் வைத்துக்கொண்டு என்னடா பெரிய இந்துமதம் என்றால் தீண்டாமையை நாங்கள் ஆதரிக்கிறோம் அல்லது இந்தந்த வகையில் எதிர்க்கிறோம் என்று பதில் சொல்பவந்தானே யோக்கியன்?



நேரடியாக பதிலளிப்பதைத் தவிர்த்து, “இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார்” என்கிற அதே அரைத்துப் புளித்து அழுகிப் பிசுபிசுத்த மாவை மீண்டும் மீண்டும் ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். கலவரங்களின் மூலமாகவும் நீதிமன்றங்களின் கொல்லைப்புறமாகவும் தமது அந்தரங்க செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் பார்ப்பன/இந்துவெறியர்கள் மக்கள் மன்றங்களில் வைக்கப்படும் கேள்விகளுக்கு ஒருநாளும் பதில் சொன்னதே கிடையாது. பார்ப்பனீய எதிர்ப்பாளர்கள் என்கிற வகையில் நம்முடைய எதிர்க்கேள்விகளுக்கு பதில் சொல்லத்திராணியற்று எகிறிக்குதிக்கும் ராமகோபாலன்களுகு அதே கோவையில், உக்கடம் என்கிற பகுதி ‘இந்து’க்கள் கொடுத்த மரியாதை கொஞ்சம் ‘ஸ்பெஷல்’ மரியாதையாகத்தான் இருந்தது. அதுபற்றிய செய்தி இதோ…….

//////10.5.2005 அன்று ராமகோபாலன் தனது தொண்டர்களோடு இஸ்லாமியர் வாழும்பகுதியான கோட்டைமேட்டை ஒட்டிய உக்கடம், மதுரைவீரன் கோவிலுக்கு வருகிறார்.1008 கோயில்களுக்கு செல்லும் பயணத்தில். இந்த 10 ஆண்டுகளில் தொய்ந்துபோயுள்ள சங்பரிவாரத்தாருக்கு புத்துணர்ச்சியூட்ட இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.

அப்பகுதி இளைஞர்கள் அவரைத்தடுக்கிறார்கள். கோயிலில் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். ஒரு இந்துவான தனக்கு இந்துக்கோயிலில் நுழைய உரிமையுண்டு என்கிறார் ராமகோபாலன்.

''அதே உரிமை எங்களுக்கும் உண்டல்லவா?' 'இங்கிருந்து 10 கி.மீ.தொலைவிலுள்ள காளப்பட்டியில் மாரியம்மன் கோயிலில் நுழைய முயன்றதற்காக அருந்ததியர் காலனி தீவைத்துக் கொளுத்தப்பட்டது தெரியுமா?' என்று கூறி இந்துக்களாகிய நாங்கள் அந்த கோயிலில் நுழைவது குறித்து பேசிவிட்டு இந்த கோயிலில் நுழைந்து கொள் என்று தடுத்துள்ளனர் இளைஞர்கள்.

இந்துக்களிடையேயான பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ராமகோபாலன். 'அப்படியானால் முதலில் காளப்பட்டி போவோம். மாரியம்மனை ஒன்றாக தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரைவீரன் கோயிலுக்கு வருவோம்' என்கின்றார்கள் இளைஞர்கள். ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியான தர்மத்திற்கு விரோதமான நிபந்தனை என்று மறுத்துவிட்டுத் திரும்புகிறது காவிப்படை.



ஒருவாரம் கழித்து 24-05-2005 அன்று கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள பண்டத்தரசியம்மன் கோவிலுக்கு தகுந்த தயாரிப்புகளோடு வருகிறார் ராமகோபாலன்.

இந்த முறை கோட்டைமேட்டை விட மிகச் சிறந்த வரவேற்பு அவருக்கு. கோவில் இருக்கும் தெருவில் நுழையவே அவர் அனுமதிக்கப்படவில்லை. அதே நிபந்தனை. ஆவாரம்பாளையமே திரண்டுவந்து அவரைத் தடுக்கிறது. தங்கள் இலக்குகளை சரியாக அடையாளம் கண்டுகொண்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். (நன்றி: புதுவிசை)

இன்று இத்தனை வக்கனையாக பேசும் இந்த பொய்யர்கள் ஏன் ஆறுமுகசாமி முதன் முதலில் தமிழில் பாடச் சென்ற பொழுது தாக்கப்பட்டது குறித்து பேச மறுக்கிறார்கள்? கள்ள மௌனம் சாதிக்கிறார்கள்?

அப்பொழுது அவருடன் எந்த கம்யூனிஸ்ட் இருந்தான், எந்த மக இகக்காரன் இருந்தான்?

கோவை கலவரத்தில் ரவுடித்தனம் செய்த அர்ஜூன் சம்பத்தை நாளை அவனது மக்கள் விரோத செயல்களுக்காக மக்கள் அவனுக்கு நடு வீதிகளில் தண்டனை கொடுக்கும் போது அவன் அம்மா என்றுதான் கத்தப் போகிறான். மாதாஜி என்றல்ல என்பதை அவன் நியாபகம் வைத்துக் கொள்ளட்டும்.////////////



நன்றி: தோழர் அசுரன் (http://poar-parai.blogspot.com/2008/03/rss.html?showComment=1204907400000)