Wednesday, September 3, 2008

கோவை-உக்கடம் 'இந்துக்களால்' விரட்டப்பட்ட ராமகோபாலன்...

கலவர நாரதன் ராமகோபாலன் என்கிற இந்துத்துவ காலிகளின் தலைவன் தோழர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி அவர் தொழில்முறையில் சார்ந்துள்ள திரைப்படத்துறையில் புகார் அளித்துள்ளான். திரைத்துறையினர் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஒகேனேக்கல் குறித்தான போராட்டத்தில் பேசிய சத்தியராஜிக்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்குப் போன இதே ராமகோபாலன், சீமான் விசயத்தில் கொல்லைப்புறமாக நுழைகிறான்.



அற்பப்பிழைப்புவாதிகளும் பாலியல் வக்கிரங்களை விற்றுப் பிழைக்கும் சமூகவிரோதிகளும் நிரம்பிய சினிமாக் கழிசடைக்குள்ளிருந்து சமூக அக்கறையோடு ஒருவன் செயல்பட விரும்பினால் அதற்கான களம் திரைக்கு உள்ளே இல்லை, வெளியே மக்கள் மத்தியில்தான் அதற்கான சரியான களம் உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட தோழர் சீமான், தன்னுடைய சமூக ரீதியான செயல்பாடுகளை பொதுமேடைகளில் வெளிப்படுத்திவருகிறார்.



திரைக்குள்ளேயும் வெளியேயும் அவருடைய செயல்பாடுகளில் எனக்கு பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் இருந்தபோதிலும், சமீபத்திய கோவைக் கூட்டத்தில் சீமான் அவர்களின் செயல்பாடு சரியாகத்தான் இருந்துள்ளது.இந்துமதத்துக்குள் இருக்கும் சாதீய அழுக்குகளைச் சுட்டிக்காட்டி ‘நையப் புடை’த்திருக்கிறார் சீமான் அக்கூட்டத்தில். தமிழ்ச்சமூகத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கும் நேரெதிர் விரோதிகளாக இருக்கும் இந்துத்துவக் கருங்காலிகளை எதிர்ப்பதில் நாம் சுய முரண்பாடுகளைத்தவிர்த்து சீமானுடன் உடன்படுவதில் தவறில்லை.



சீமான் மேடையில் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல்தான் ஆத்திரத்தில் அசடு வழிந்திருக்கிறார்கள் ராமகோபாலனின் பரிவாரத்தினர். இப்பிரச்சினையை திரைத்துறை வரைக் கொண்டுவந்திருக்கும் ராமகோபாலனாகட்டும், கோவையில் கண்ட இடங்களிலெல்லாம் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய ‘எச்ச’(ப்பொறுக்கி)ராஜாவாக இருக்கட்டும் எவனும் சீமானின் கேள்விக்கு யோக்கியமாக பதில் சொல்லவேயில்லை இன்றுவரை. இவ்வளவு தீண்டாமை இழிவுகளையும் வைத்துக்கொண்டு என்னடா பெரிய இந்துமதம் என்றால் தீண்டாமையை நாங்கள் ஆதரிக்கிறோம் அல்லது இந்தந்த வகையில் எதிர்க்கிறோம் என்று பதில் சொல்பவந்தானே யோக்கியன்?



நேரடியாக பதிலளிப்பதைத் தவிர்த்து, “இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார்” என்கிற அதே அரைத்துப் புளித்து அழுகிப் பிசுபிசுத்த மாவை மீண்டும் மீண்டும் ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். கலவரங்களின் மூலமாகவும் நீதிமன்றங்களின் கொல்லைப்புறமாகவும் தமது அந்தரங்க செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் பார்ப்பன/இந்துவெறியர்கள் மக்கள் மன்றங்களில் வைக்கப்படும் கேள்விகளுக்கு ஒருநாளும் பதில் சொன்னதே கிடையாது. பார்ப்பனீய எதிர்ப்பாளர்கள் என்கிற வகையில் நம்முடைய எதிர்க்கேள்விகளுக்கு பதில் சொல்லத்திராணியற்று எகிறிக்குதிக்கும் ராமகோபாலன்களுகு அதே கோவையில், உக்கடம் என்கிற பகுதி ‘இந்து’க்கள் கொடுத்த மரியாதை கொஞ்சம் ‘ஸ்பெஷல்’ மரியாதையாகத்தான் இருந்தது. அதுபற்றிய செய்தி இதோ…….

//////10.5.2005 அன்று ராமகோபாலன் தனது தொண்டர்களோடு இஸ்லாமியர் வாழும்பகுதியான கோட்டைமேட்டை ஒட்டிய உக்கடம், மதுரைவீரன் கோவிலுக்கு வருகிறார்.1008 கோயில்களுக்கு செல்லும் பயணத்தில். இந்த 10 ஆண்டுகளில் தொய்ந்துபோயுள்ள சங்பரிவாரத்தாருக்கு புத்துணர்ச்சியூட்ட இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.

அப்பகுதி இளைஞர்கள் அவரைத்தடுக்கிறார்கள். கோயிலில் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். ஒரு இந்துவான தனக்கு இந்துக்கோயிலில் நுழைய உரிமையுண்டு என்கிறார் ராமகோபாலன்.

''அதே உரிமை எங்களுக்கும் உண்டல்லவா?' 'இங்கிருந்து 10 கி.மீ.தொலைவிலுள்ள காளப்பட்டியில் மாரியம்மன் கோயிலில் நுழைய முயன்றதற்காக அருந்ததியர் காலனி தீவைத்துக் கொளுத்தப்பட்டது தெரியுமா?' என்று கூறி இந்துக்களாகிய நாங்கள் அந்த கோயிலில் நுழைவது குறித்து பேசிவிட்டு இந்த கோயிலில் நுழைந்து கொள் என்று தடுத்துள்ளனர் இளைஞர்கள்.

இந்துக்களிடையேயான பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ராமகோபாலன். 'அப்படியானால் முதலில் காளப்பட்டி போவோம். மாரியம்மனை ஒன்றாக தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரைவீரன் கோயிலுக்கு வருவோம்' என்கின்றார்கள் இளைஞர்கள். ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியான தர்மத்திற்கு விரோதமான நிபந்தனை என்று மறுத்துவிட்டுத் திரும்புகிறது காவிப்படை.



ஒருவாரம் கழித்து 24-05-2005 அன்று கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள பண்டத்தரசியம்மன் கோவிலுக்கு தகுந்த தயாரிப்புகளோடு வருகிறார் ராமகோபாலன்.

இந்த முறை கோட்டைமேட்டை விட மிகச் சிறந்த வரவேற்பு அவருக்கு. கோவில் இருக்கும் தெருவில் நுழையவே அவர் அனுமதிக்கப்படவில்லை. அதே நிபந்தனை. ஆவாரம்பாளையமே திரண்டுவந்து அவரைத் தடுக்கிறது. தங்கள் இலக்குகளை சரியாக அடையாளம் கண்டுகொண்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். (நன்றி: புதுவிசை)

இன்று இத்தனை வக்கனையாக பேசும் இந்த பொய்யர்கள் ஏன் ஆறுமுகசாமி முதன் முதலில் தமிழில் பாடச் சென்ற பொழுது தாக்கப்பட்டது குறித்து பேச மறுக்கிறார்கள்? கள்ள மௌனம் சாதிக்கிறார்கள்?

அப்பொழுது அவருடன் எந்த கம்யூனிஸ்ட் இருந்தான், எந்த மக இகக்காரன் இருந்தான்?

கோவை கலவரத்தில் ரவுடித்தனம் செய்த அர்ஜூன் சம்பத்தை நாளை அவனது மக்கள் விரோத செயல்களுக்காக மக்கள் அவனுக்கு நடு வீதிகளில் தண்டனை கொடுக்கும் போது அவன் அம்மா என்றுதான் கத்தப் போகிறான். மாதாஜி என்றல்ல என்பதை அவன் நியாபகம் வைத்துக் கொள்ளட்டும்.////////////



நன்றி: தோழர் அசுரன் (http://poar-parai.blogspot.com/2008/03/rss.html?showComment=1204907400000)

No comments: